காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வருகை பதிவேடு கருவி செயல்படாததால் மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உள் மற்றும் புற சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
சுமார் 17 பிரிவுகள் அடங்கிய இந்த அரசு மருத்துவமனையில் கடந்த 6 மாதமாக வருகையை பதிவு செய்யும் பயோ மெட்ரிக் கருவி பழுதடைந்துள்ளதாகவும், இதனால் மருத்துவர்களும் செவிலியர்களும் காலதாமதமாக பணிக்கு வருவதாகவும் நோயாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒரு சில மருத்துவர்கள் தனியாக கிளினிக் வைத்துள்ளதால், மருத்துவமனைக்கு வந்து வருகை பதிவில் கையொப்பமிட்டு சென்று விடுவதாகவும் கூறியுள்ளனர். பல பிரிவுகளில் காலை 8.30 மணி வரை மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த நேரத்திற்கு வராததால் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.