பேச்சிப்பாறை அணை அருகே உள்ள பேச்சி அம்மன் கோயிலில் உள்ள பொருட்களை சூறையாடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை அருகே உள்ள பேச்சியம்மன் கோயிலுக்கு வழக்கம் போல் காலையில் சென்ற நிர்வாகிகள், கோயிலில் இருந்த கல்விளக்கு உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும், கோயிலில் இருந்த விளக்கு, ஹோம குண்டம் மற்றும் விநாயகர் சன்னதி ஆகியவை சேதமடைந்து காணப்பட்டன.
இது குறித்து கோயில் நிர்வாகிகள் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், கோயிலில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், அதே பகுதியைச் சேர்ந்த பென்ட் என்பவர் கோயிலில் நுழைந்து பொருட்களை தேசப்படுத்தியது தெரியவந்தது. மேலும், பென்ட்டை அவரது தாய் மற்றும் சகோதரி அழைத்து சென்றதும் பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள பென்ட்டை போலீசார் தேடி வரும் நிலையில், இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.