பாரதத்தாயின் மகனாக சிம்பொனி அரங்கேற்றம் செய்து இளையராஜா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சின்னத்தாயின் மகனாக பண்ணைபுரத்தில் பிறந்து பாரதத்தாயின் மகனாக லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் நிகழ்த்தி தனது தெய்வீக இசையால் பாரதத்திற்கு இளையராஜா பெருமை சேர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் அருளால் திருவாசகத்திற்கு இசை உருவம் தந்த இசை சித்தர் இளையராஜாவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என ஹெச்.ராஜா கூறியுள்ளார்.