தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுத்தால்தான் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை தடுக்க முடியும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாகவே பாலியல் துன்புறுத்தல் என்பது தமிழகத்தில் அதிகமாக இருந்து வருகிறது. இதற்கு அடிப்படையான காரணம் போதை பொருட்களுக்கு இளைஞர்கள், அடிமையாக இருப்பது தான் என தெரிவித்தார்.
பாண்டிச்சேரி துணி நிலை ஆளுநராக இருந்த நேரத்தில், தமிழகத்தில் இருந்து தான் பாண்டிச்சேரிக்கு நிறைய கஞ்சா கடத்தப்பட்டதாகவும், அதை தடுத்து நிறுத்துவத்றகான முயற்சிகளை எடுத்ததாகவும் கூறினார்.
தமிழக அரசு கடுமையான நடவடிக்கையின் மூலம் போதை பொருள் கடத்தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அப்படி நிறுத்தினால் மட்டும் பாலியல் பிரச்சனைகளை தடுத்து நிறுத்த முடியும் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.