சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4-வது வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடப்பதால் புறநகர் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.