திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு ஆகம விதிகளின்படி அண்ணாமலையாருக்கும், உண்ணாமுலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பக்தர்கள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.