பழனிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவர்களை அழைத்து வரும் சுற்றுலா வாகனங்களிடம் நகராட்சி சார்பில், நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த கட்டணம் அதிகபட்சமாக 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முறையான பார்க்கிங் வசதிகள் கூட செய்யப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர்கள், நுழைவு கட்டணத்தை நகராட்சி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.