அறந்தாங்கி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டி எல்லை பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த பெருங்காடு கிராமத்தில் உள்ள முக்கன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பெரிய மாடு, நடுமாடு, கரிசான்மாடு என 3 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் 100க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில், நிர்ணயிக்கப்பட்ட பந்தய தூரத்தை நோக்கி மாட்டுவண்டிகள் ஒன்றையொன்று முந்திச் சென்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு 2 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. மாட்டுவண்டி பந்தயத்தை சாலையின் இருபுறமும் கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்த நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.