மணப்பாறையில் உள்ள தனியார் ஜவுளிக்கடையில் 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட சேலைகளை வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மகளிர் தினத்தை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு மட்டும் 50 ரூபாய்க்கு சேலைகள் விற்கப்படும் என ஜவுளிக்கடை அறிவித்தது.
சேலை வாங்க வருபவர்கள் இன்ஸ்டாவில் சம்மந்தப்பட்ட ஜவுளி நிறுவனத்தை பின் தொடர்பவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையின் கீழ் சேலைகள் விற்கப்பட்டன. ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சேலைகளை வாங்கிச் சென்றனர்.