நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் தேசிய கல்விக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு, வக்ஃபு மசோதா, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் எழுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரே எண் கொண்ட வாக்காளர் அடையாள அட்டை விவகாரத்தை எழுப்ப திரிணாமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தக் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் பெறவும் மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.