இந்துக்களுக்கு எதிரான விவகாரங்களை முன்வைத்து மாவட்ட, மாநில அளவில் அறவழி போராட்டங்கள் நடத்தப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், மாநில அரசுக்கு எதிராக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், கோயிலுக்கு செல்லும் பக்தர்களை அலைக்கழிக்கும் இந்து சமய அறநிலயத்துறைக்கு கண்டனம் தெரிவித்தார். இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் பல்வேறு விவகாரங்களை கண்டித்து மாவட்ட, மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த அவர், அறவழியில் போராட்டத்தை முன்னெடுக்க போவதாக தெரிவித்தார்.