கரூர் மாவட்டம், ஆத்தூர் அருகே அமைந்துள்ள மகா சோளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழாவை ஒட்டி வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது.
வீரசோளியபாளையத்தில் உள்ள மஹா சோளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை ஒட்டி வானில் 400 டிரோன்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டு கண்கவர் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்ற வள்ளிக்கும்மியாட்டம் கோலாகலமாக நடத்தப்பட்டது.