ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா வென்றதையடுத்து நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் தேசியக் கொடியை ஏந்தியபடி, ஆடிப்பாடி இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடிய ரசிகர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொல்கத்தாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பட்டாசு வெடித்து இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடினர்.
ஜம்மு-காஷ்மீரில் ஏராளமான இளைஞர்கள் சாலைகளில் திரண்டு இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடினர். தேசியக் கொடியைக் கையில் பிடித்தபடி பட்டாசு வெடித்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதேபோல் டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.