ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் வெற்றியால் சென்னை மெரினா கடற்கரை களைகட்டியது.
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி சென்னை மெரினாவில் நேரலை செய்யப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியதை ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளமடித்தும், ஆடிப் பாடியும் கொண்டாடினர்.