ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் குடிநீர் தொட்டியின் உச்சியில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பரமக்குடி பேருந்து நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான சுமார் 100 அடி உயரம் கொண்ட குடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் மேலே ஏறிய நபர் ஒருவர் திடீரென கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.