ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவரை 3 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம்போல் அரசு பேருந்தில் பள்ளிக்கு சென்றுள்ளார்.
கெட்டியம்மாள்புரம் பகுதியில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து தேவேந்திரனை அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயமடைந்த மாணவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கபடி விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் கொலை முயற்சி சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.