முன்னாள் தலைமை ஆசிரியரும் தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவருமான ஐயா க.பழனிச்சாமிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேசியக் கல்விக் கொள்கை குறித்து, முன்னாள் தலைமை ஆசிரியரும், தேசிய ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவருமான ஐயா க.பழனிச்சாமி பேசியுள்ள காணொளியைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
தாய்மொழி வழிக் கல்வியையும், அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தரமான கல்வியையும் வழங்கும் தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை எவ்வளவு முக்கியமானது என்பதை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.
தமிழக ஏழை, எளிய மாணவர்களுக்கு சமக்கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்ட அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கல்வியில், பணமிருப்பவர்களுக்கு ஒரு சட்டம், ஏழை எளியோருக்கு ஒரு சட்டம் என்ற ஏற்றத் தாழ்வு மாற வேண்டும். அனைவருக்கும் தரமான சமக்கல்வி கிடைத்திட வேண்டும்.
அதற்காக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில், http://puthiyakalvi.in இணையதளம் வாயிலாக, உங்கள் மேலான ஆதரவை வழங்குமாறு அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.