காரைக்குடியை சேர்ந்த இளைஞர் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த சுப்பு என்பவர் அயர்லாந்தில் உள்ள தனியார் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மரிசா லாப்ஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், சுப்புவின் சொந்த ஊரான காரைக்குடியில் தமிழர் கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.
செய்தியாளர்களிடம் பேசிய மணமகன் சுப்பு, 2 ஆண்டுகளுக்கு முன்பு மரிசா லாப்ஸை காரைக்குடிக்கு அழைத்து வந்ததாகவும், தமிழக கலாச்சாரம் மற்றும் பண்பாடு மீதான ஈர்ப்பால், தமிழக முறைப்படி திருமணம் நடைபெற்றதாகவும் கூறினார்.