மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் உள்ள பழக்கடையில் தர்ப்பூசணி பழங்களை சாப்பிட்ட பாகுபலி யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓடந்துறை பகுதியில் சாலையோரம் தர்ப்பூசணி கடை நடத்தி வரும் வியாபாரி, வழக்கம்போல் தார்பாய் அடைத்து கடையை மூடியுள்ளார்.
அப்போது, கல்லாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை கடையின் தடுப்புகளை உடைத்து எறிந்து, தர்ப்பூசணி பழங்களை ருசித்து சாப்பிட்டது.