சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதாக பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டி உள்ளார்.
இறுதிப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டி உள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல், முழு போட்டியும் உற்சாகத்தை அளித்ததாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்தியா அணியால் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்வதாக பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், கீர்த்தி சனோன் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.