மேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல பொதுமக்களிடம் 10 ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம், மேலூரில் மூன்று மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, மூர்த்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.
அங்குள்ள கழிப்பறைக்கு செல்ல பொதுமக்களிடம் 5 முதல் 10 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், கட்டணம் கொடுத்து கழிப்பறை செல்ல எதற்காக 6 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.