மூன்றாவதாக குழந்தை பெற்றால் 50 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஆந்திர மாநிலம், விஜயநகர தொகுதியின் எம்.பி. அப்பல் நாயுடு தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த எம்பி அப்பல் நாயுடு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ஒரு குடும்பத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தையின் பெயரில் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்வோம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தால் அக்குழந்தையின் பெற்றோருக்கு அரசு சார்பில் பசுமாடு, கன்று குட்டி ஆகியவை பரிசாக வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.