முகநூல் மூலம் அறிமுகமான நண்பருக்கு மயக்க மருந்து கொடுத்து நகையை திருடிய இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
தருமபுரியைச் சேர்ந்த குணசேகரன் என்பவருடன் சிவகாசியைச் சேர்ந்த முனிஸ்வரன் என்பவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளனர். இருவரும் மதுரையில் இருந்து புனலூருக்கு ரயிலில் சென்றுள்ளனர்.
அப்போது, குணசேகருக்கு மயக்க மருந்து கொடுத்து அவர் அணிந்திருந்த நகை மற்றும் செல்போனை எடுத்துக்கொண்டு முனீஸ்வரன் தப்பியோடினார். தலைமறைவாக இருந்த முனீஸ்வரனை, ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.