சென்னை தலைமைச் செயலகம் அருகே காரும், வேனும் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களோடு சென்ற வேன், தலைமைச் செயலகம் அருகே, வளைவில் திரும்ப முயன்ற போது காரில் மோதியது. அதன் தொடர்ச்சியாக பின்னால் வந்த வாகனங்களும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பள்ளி மாணவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தலைமைச் செயலக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.