திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தக்கோரி பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
திருச்சி அரசு தலைமை மருத்துவமனை எதிரில், அரசு பார்வையற்றோர் பெண்கள் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற மாணவி பள்ளி வளாகத்திலயே செயல்படும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதற்கு மாணவியின் பெற்றோரும், பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததால், தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி பார்வையற்றோர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.