ஊதிய உயர்வு, காலமுறை சிறப்பு ஊதியம் வழங்க வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஊராட்சிப் பணியாளர்கள் சென்னை பனகல் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூய்மை காவலர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை 10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், தூய்மைப் பணியாளர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 25க்கும் அதிகமான கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கணக்கான ஊராட்சிப் பணியாளர்கள், சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் ஊதியம் வழங்க வேண்டும் எனவும், அதனை ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.