சிப் டிசைன் ஆய்வுக் கட்டுரை வெளியிடுவதில் சர்வதேச அளவில் இந்தியா 3-ஆம் இடம்பிடித்துள்ளது.
ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளைப் பின்னுக்குகுத் தள்ளி இந்தியா முன்னேறியிருப்பதாக அமெரிக்காவின் ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சிப் டிசைன் தொடர்பாக கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டுவரை மொத்தம் 4 லட்சத்து 72 ஆயிரத்து 819 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதில் 8.4 சதவீதம் அதாவது 39 ஆயிரத்து 709 கட்டுரைகளை இந்தியா சமர்ப்பித்துள்ளது.