கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் கருவி பயன்படுத்தப்படவுள்ளது.
கொல்கத்தாவில் 14 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பணி நடைபெறுகிறது. இதில், கிடர்பூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நிலவியதால், சுரங்கம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. இதையொட்டி, திருவள்ளூர் மாவட்டம் அலிஞ்சிவாக்கத்தில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.