முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.
எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் – தீக்ஷனா திருமணம் கடந்த 3ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், சி விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மேலும், மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக சார்பில் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் எஸ்.ஆர். சேகர், வினோஜ் பி செல்வம் உள்ளிட்டோர் எஸ்.பி வேலுமணியின் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.