இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
இன்று (மார்ச் 11) தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,020-க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.64,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து கிராமுக்கு ரூ.107-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,07,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.