திருத்தணி முருகன் கோயிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.
இக்கோயிலில் மாசி பிரம்மோற்சவ பெருவிழா மார்ச் 3-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 9-ம் நாளான இன்று முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முருக பெருமான் வள்ளி தாயாரை கடத்திச் சென்று, திருத்தணி மலைமீது வைத்து திருமணம் செய்து கொண்டதாக உள்ள ஐதீகத்தின் அடிப்படையில், குதிரை வாகனத்தில் புறப்பட்ட முருக பெருமான், வள்ளி தயாருடன் கோயிலில் உள்ள வள்ளி மண்டபம் சென்றடைந்தார்.
பின்னர் வேதாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க பக்தர்கள் முன்னிலையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.