பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக வெளியே வந்து பேச வேண்டும் எனவும், 10 ஆண்டுகளுக்கு பின் பேசுவதில் பலனில்லை என்றும் பாஜக நிர்வாகி குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் இஸ்ரோ திட்ட இயக்குநர் நிகார் ஷாஜி, பாஜக நிர்வாகி குஷ்பு , மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வென்ற காசிமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பாஜக நிர்வாகி குஷ்பு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாலியல் குற்றங்களை தடுக்க முடியும் என தெரிவித்தார்.
நாளை வளரும் தலைமுறைக்கு என்ன மாதிரியான சமூகத்தை உருவாக்கிக்கொடுக்க போகிறோம் என கேள்வி எழுப்பிய அவர், பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணும் தைரியமாக வெளியே வந்து பேச வேண்டும் என வலியுறுத்தினார்.