தூத்துக்குடி மாவட்டம், P&T காலனியில் சாலையோரம் தேங்கியிருந்த நீரில் குழந்தை விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
P&T காலனி பகுதியில் பெய்த மழையின் காரணமாக சாலை ஓரம் உள்ள பள்ளத்தில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் சாலை ஓரமாக நடந்து சென்ற குழந்தை ஒன்று, அந்த தண்ணீரில் மூழ்கியது.
இதனை கண்ட ஒருவர் உடனடியாக குழந்தையை காப்பாற்றினார். தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.