அவதூறு வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை அவரே திரும்பப்பெற்றார்.
மக்களவை தேர்தலின்போது மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தயாநிதிமாறன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருப்பதால், வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி இபிஎஸ் முன்னதாக மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனை அவர் தற்போது திரும்ப பெற்றுள்ளார்.