சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய சதுரகிரியில், பிரசித்திபெற்ற சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களை முன்னிட்டு இன்று முதல் வரும் 14-ம் தேதி வரை, 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பிரதோஷ தினமான இன்று உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட நேரம் காத்திருந்து மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.