விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் மாசி மக திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற்றது.
வண்ண மலர்கள், வாழைமரம் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு அணிவகுத்து நின்ற 5 திருத்தேர்களில், விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், பெரியநாயகி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்து மாட வீதிகள் வழியாக வலம் வந்தனர்.