விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கபடி விளையாட்டின்போது காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மந்திரிஓடை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் மதுரை மாவட்டம் பொய்க்கரைப்பட்டியில் நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்றிருந்தார். அப்போது ஜெகனை எதிர் அணியினர் கீழே தள்ளியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் ஜெகன் மைதானத்திலேயே மயக்கமடைந்தார்.
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் ஜெகனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெகனுக்கு தலையில் உள்ள சுவாச நரம்பு செயலிழந்துவிட்டதாக கூறி அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் கபடி வீர ஜெகன் உயிரிழந்தார். இவரின் உடலுக்கு ஏராளமான கபடி வீரர்கள், கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.