நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை காலை வரை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டஙகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
டெல்டா மாவட்டங்களான நாகை, மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதலே மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் நாளை காலை வரை மிக கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
அதன் படி கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.