தங்கக் கடத்தல் வழக்கு விசாரணையின்போது நடிகை ரன்யா ராவ் துன்புறுத்தப்பட்டாரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கூடுதல் தலைமை செயலாளர் கௌரவ் குப்தா தலைமையில் விசாரணையை நடத்தவும், விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தங்கக் கடத்தல் தொடர்பாக ரன்யா ராவின் நண்பர் தருணிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.