சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது.
கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக எடுத்து வரப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் 100 ரூபாய் வரை விற்பனையான வெங்காயம், தற்போது 26 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.
வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்ததாலும், வரத்து அதிகரிப்பாலும் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.