திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கதிரவன், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கட்சி விழாக்களில் கலந்து கொண்டு மீண்டும் தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார். நத்தம் அருகே சென்றபோது சுங்கச்சாவடி பணியாளர்கள் அவரது காரை தடுத்து நிறுத்தி கட்டணம் கேட்டுள்ளனர்.
உடனே, தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எனவும் தன்னை அனுமதிக்குமாறும் கதிரவன் கூறியுள்ளார். ஆதற்கு மறுப்பு தெரிவித்த பணியாளர்கள், கதிரவனை மிரட்டும் தொனியில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கதிரவன், தனது ஆதரவாளர்கள் சுமார் 300 பேருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் சுங்கச்சாவடி பணியாளர்களை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.