துணைவேந்தர் நியமனத்திற்காக தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக் கழக துணைவேந்தர் தேடுதல் குழு தொடர்பான அரசாணையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, வேண்டுமென்றே யுஜிசி பிரதிநிதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யுஜிசி விதிமுறைகளின் படி அமைக்கப்பட்ட தேடுதல் குழு பரிந்துரையின்படிதான் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் நியமனம் நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர்,
யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிடப்பட்டிருப்பது யுஜிசி விதிமுறைகளுக்கும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முற்றிலும் முரணானது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே யுஜிசி பிரதிநிதி இல்லாமல் தேடுதல் குழுவை நியமித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், யுஜிசி பிரதிநிதியுடன் தேடுதல் குழு தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டும் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார்.