கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
களமருதூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் மழையில் நனையாமல் இருக்க மரத்தின் அடியில் நின்றுள்ளனர். அப்போது மின்னல் பாய்ந்து ராமர் என்ற முதியவரும், ராம மூர்த்தி என்ற ஓய்வுபெற்ற காவலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், சூர்யா என்ற இளைஞர் மின்னல் பாய்ந்து படுகாயமடைந்த நிலையில், அவருக்கு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.