கச்சத்தீவு திருவிழா நெருங்குவதையொட்டி பொதுமக்களை ஏற்றிச்செல்லும் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா வரும் மார்ச் 14 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்து 464 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், பொதுமக்களை ஏற்றிச் செல்லவுள்ள 23 நாட்டுப் படகுகளையும், 78 விசைப் படகுகளையும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.