திருப்பத்தூர் அருகே ஆடு வியாபாரி வீட்டின் ஜன்னலை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியில் முத்து என்பவருக்கு சொந்தமான வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.