மகாராஷ்டிர மாநிலம் புனேயை சேர்ந்த மாணவர்கள், ஜாமட்ரி பாக்ஸ், பெஞ்ச் மற்றும் தண்ணீர் பாட்டிலில் இசையமைத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதன் மூலம் வகுப்பறையை சிறிய கச்சேரி மேடையாகவே மாணவர்கள் மாற்றிவிட்டதாக சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
ஜாமட்ரி பாக்ஸ் கொண்டு மாணவர்கள் இசையமைத்த வீடியோவை அவர்களது ஆசிரியர்களே கைப்பேசியில் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு ஊக்குவித்தனர்.