காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல்ராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
காஞ்சிபுரத்தை சேர்ந்த வசூல் ராஜா என்பவர் மீது கொலை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பிரபல ரவுடியாக வலம் வந்த இவரை திருகாளிமேடு ரேஷன் கடை முன்பு மர்ம நபர்கள் நாட்டு வெடிகொண்டு வீசி படுகொலை செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் கொலையாளிகள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
தற்போது கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.