கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நாள் தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் கோயிலில் நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜையையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
தொடர்ந்து அவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பகவதி அம்மனை மனமுருகி வழிபட்டனர். மேலும் பக்தர்களின் வருகையால் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.