நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் கர்நாடக டி.ஜி.பி. ராமசந்திரா ராவிடம் விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பிரபல நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு வந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது தந்தை டிஜிபி ரேங்க் அதிகாரி என்பதால், விமான நிலையத்தில் பரிசோதனையில் இருந்து தப்பிக்க தந்தை பெயரை பயன்படுத்தி பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.