தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்திற்கு கூடுதல் இடம் கிடைக்கும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் திட்டமிட்டபடி தொடங்க வேண்டுமென தெரிவித்தார். தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறிய மத்திய அமைச்சர், குறிப்பாக தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களிலும் தொகுதி அதிகரிக்கும் என விளக்கமளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தொகுதி மறுவரையறையால் வட மாநிலங்கள் மட்டுமே பயன் அடையும் என கூறுவது நியாயம் அல்ல என தெரிவித்துள்ளார்.